இந்திய விமானப்படையில் சேர வேண்டுமா?
இந்தியவிமானப் படையில் சேர விருப்பம் உள்ள இந்திய குடிமகன்கள் வரும் டிசம்பர் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில் நுட்பம் மற்றும் தொழில் நுட்பம் சாராத குரூப் ஏ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 16 மற்றும் 17ம் தேதிகளில் நடைபெற உள்ளது தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் டிசம்பர் 30க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கான வயதுவரம்பு முதல் 24 வயது உடையவராக இருக்க வேண்டும். தொழில்முறை பைலட் உரிமம் வைத்திருப்பவர்கள் வயதுவரம்பு 26 நிர்ணயக்கப்பட்டுள்ளது. இத்தேர்வானது எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை என மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment