Monday, 7 January 2019
Tuesday, 11 December 2018
காங்கிரஸ் Vs பாஜக தேர்தல் முடிவுகள்
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவு:
Monday, 10 December 2018
மாட்டிக்கொண்ட மல்லையா
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடிக்கும் மேற்பட்ட கடன்பெற்று அதனைத் திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா கடந்த 2016ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்தார். இந்நிலையில் அவரை கைது செய்வதற்காக சிபிஐ அதிகாரிகள் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஓர் ஆண்டுகளாக நீடித்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர். ஆனால் விஜய் மல்லையா இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக கூறப்படுகிறது. அவர் அப்படி மேல்முறையீடு செய்தால் அவரை கைது செய்ய இன்னும் பல நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் மல்லையா கூறிய கருத்தாவது நான் எனக்கென்று தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கடனும் பெறவில்லை, தன்னுடைய கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் வளர்ச்சிக்காக தான் கடன் பெற்றேன் என்று கூறியுள்ளார். தான் பெற்ற கடனை வட்டியில்லாமல் செலுத்த தயாராக உள்ளதாகவும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் நடைபெற்ற வினோத போட்டி
