சீனாவில் நடைபெற்ற வினோத போட்டி
சீனாவில் நடைபெற்ற மிளகாய் உண்ணும் போட்டியில் சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நிமிடத்தில் 20 மிளகாய்களை சாப்பிட்டு உலக சாதனை படைத்தார். சீனாவில் வெண்ணீரில் அமர்ந்து மிளகாய் தின்னும் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதற்கென்று பிரத்தியேகமாக தயார் செய்யப்பட்ட இடத்தில் போட்டியாளர்கள் காரசாரமான மிளகாய்களை தின்றனர். இப்போட்டியில் சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஒரு நிமிடத்தில் சுமார் 20 மிளகாய்களை தின்று வெற்றி இலக்கை அடைந்தார்.
ரஷ்யாவில் நடந்த அழகிப் போட்டி
ரஷ்யாவில் நடந்த புதியவர்கள் அழகிப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.50 வயது மேற்பட்ட பெண்களுக்கு மற்றும் வெளியே ஏற்படும் பிரச்சனைகளால் மனமுடைந்து போவதை தடுக்க இத்தகைய போட்டி நடைபெறுவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அழகிய வண்ண வண்ண ஆடைகள் அணிந்து மற்றும் பூனை நடை போட்டு வந்த காட்சியை கண்டு பார்வையாளர்கள் மெய்சிலிர்த்துப் போயினர். இப்போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இருக்கிறது.
No comments:
Post a Comment