சிக்கிய சீனாவின் ஹவாய் நிறுவனம் பின்னணியில் உள்ள காரணம் என்ன?
(HUAWI company.mobils,laptop and gadgets)
உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான சீனாவைச் சேர்ந்த ஹவாய் நிறுவனம் செல்போன் மற்றும் கணினி போன்ற உபகரணங்களை தயாரித்து இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 177 உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஹவாய் நிறுவனம் நடப்பு காலாண்டில் உலகில் அதிக அளவு செல்போன் விற்பனை செய்த நிறுவனம் என்ற பெருமையும் பெற்றதுடன் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் முந்தி உலகில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்தது. இதன்மூலம் ஹவாயின் பங்குகள் அதி வேகத்தில் உயர்ந்து அந்த கம்பெனிக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்தது. ஹவாயின் அபரிவிதமான வளர்ச்சியை கண்ட ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் 5ஜி அலைக்கற்றை ஒப்பந்தத்தை ஹவாய் உடன் போட்டுக்கொண்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஹவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளில் தகவல் கசிவு, ஒட்டு கேட்க படுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக அமெரிக்க அரசு ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது. இதைக்கேட்ட உலக நாடுகள் அனைத்தும் அதிர்ந்து போயினர். இதையடுத்து அமெரிக்காவின் அரசு ஊழியர்கள் யாரும் ஹவாய் நிறுவனத்தின் தயாரிப்புகளை உபயோகிக்க கூடாது என தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை ஹவாய் நிறுவனத்தின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு ஹவாய் நிறுவனம் ஆரம்பத்திலிருந்தே மறுப்பு தெரிவித்து வந்தது. இதையடுத்து ஹவாய் நிறுவனத்துடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ரத்து செய்தது. இதனால் பல வருடங்களாக தங்களது வாடிக்கையாளர் கட்டிக்காத்து வந்த நிறுவனம் அவர்களை இழக்க நேரிட்டது பங்கு சந்தைகளில் மிகப்பெரிய சரிவை சந்தித்தது வருகிறது. இது ஒருபுறமிருக்க வர்த்தக விவகாரம் தொடர்பாக கன்னட சென்ற ஹவாய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வெண் சு மேக்கை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். கைது தொடர்பான செய்தியை கன்னட அரசு ரகசியமாக வைத்திருந்ததாகவும். பின்னரே சீன அரசுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாட்டிற்கு ஹவாய் நிறுவனம் சட்டவிரோதமாக தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டார் என கனடா அரசு கூறியுள்ளது. விரைவில் அவர் அமெரிக்க அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளனர். இது எடுத்து சீன அரசாங்கம் ஹவாய் நிறுவனத்தின் தலைமை அதிகாரியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றும் அவரை விரைவில் விடுதலை செய்யவில்லை என்றால் கன்னட அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது. இது அடுத்து கன்னட அரசு அவரை விடுதலை செய்யுமா அல்லது அமெரிக்க அரசிடம் ஒப்படைக்கும் என்று நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அப்படி அவர் அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டாள் சீனா அமெரிக்க வர்த்தக உறவுகள் மிக கடுமையான அளவு பாதிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment