FIRST SINGLE TRACK FOR VISWASAM
தல அஜித்குமார் நடித்து வெளியாக உள்ள படம் விசுவாசம். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த மோஷன் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விசுவாசத்தின் முதலாவது பாடல் இன்று மாலை ஏழு மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கொண்டிருக்கின்றனர். தல அஜித்குமார் நடித்து இரண்டு வருடங்கள் கழித்து வெளியாக உள்ள படம் விசுவாசம், இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் சில செய்திகளை தெரிந்துகொள்ள நமது தளத்தை தொடர்ந்து பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment