வங்கியில் கல்விக்கடன் பெறுவது எப்படி
கல்வி கட்டண தொகை கடனாக வழங்கப்படும் பொழுது, மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறமையும் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. உள்நாட்டில் கல்வி கற்க அதிகபட்சமாக ரூபாய் 7.5 லட்சமும், வெளிநாட்டில் கல்வி பயில அதிகபட்சமாக 15 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியின் கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடுகிறது.
ரூபாய் 4 லட்சம் வரையிலான கடனுக்கு விளிம்புத் தொகை செலுத்த தேவை இல்லை. கடன் தொகை நாலு லட்சத்திற்கும் மேற்படும் போது உள்நாட்டில் படிப்பதற்கான கடனுக்கு 5 சதவீதமும் மற்றும் வெளிநாட்டில் கல்வி பயில 15 சதவீதமும் விளிம்பு தொகையாக கடன் பெறுபவர்செலுத்த வேண்டும்.
கடன் தொகை ரூபாய் நாளில் லட்சத்திற்குள் இருந்தால் எந்த ஒரு பிணையமும் தேவை இல்லை. ரூபாய் நாள் இலட்சத்திற்கு மேற்பட்டால் கடன் தொகைக்கு நிகரான பிணையம் கொடுக்க வேண்டும். கல்விக் கடனுக்கு செயல்முறை கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. கல்விக் கடனை குறிப்பிட்ட தவணைக்கு முன்பாக திருப்பி செலுத்தினால் அதற்கு எந்த ஒரு அபராத தொகையும் வசூலிக்கப்படுவதில்லை.
வங்கியில் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்:
- இறுதியாக எழுதி தேர்ச்சி பெற்ற தேர்வின் மதிப்பெண் சான்றிதழ்.
- கல்லூரிகளில் சேர்ந்ததற்கான அத்தாட்சி கடிதம் மற்றும் கல்வி கட்டண விவரம்.
- கடன் பெறும் மாணவர் பெற்றோர் மற்றும் பொறுப்புறுதி யாளர்களின் இன்றைய அளவு புகைப்படங்கள் 2
- சம்பளதாரர்கள் மாத சம்பளம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுவதாக இருந்தால் கடந்த 6 மாதத்திற்கான வங்கிக் கணக்கு பட்டியல்.
- தீட்டு விலாசத்தில் கான அத்தாச்சி படிவம்.
- பெற்றோர்களின் சொத்து மற்றும் கடன் பற்றிய விவரம்.
- மாதாந்திர சம்பளம் பெறுவதற்காக இருப்பின் அனைத்து பின்பு சுய தொழில் செய்பவராக இருந்தால் வருமானத்திற்கான அத்தாட்சி.
- வருமான வரி செலுத்தி வருமான வரி அலுவலகத்திற்கு சமர்ப்பித்த வருமான வரி படிவம்
No comments:
Post a Comment